1956 ஆம் ஆண்டு 56 மாணவர்களையும் ஒரு ஆசிரியையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்ப பாடசாலை 1993 ஆம் ஆண்டு கல்வி திணைக்களத்தின் அனுமதியோடு 1994 ஆம் ஆண்டு தரம் 10 வரை உயர்த்தப்பட்டது. 1997 ஆம் ஆண்டு உயர்தர கலை பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. உயர்தர ஆரம்பிக்கப்பட் டு 1999இல் ஒரு மாணவன் பரீட்சை எழுதினார். பின் ஒவ்வொரு வருடமும் படிப்படியாக கூடி ஏழு வருட காலப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயர்தர பரிட்சை எழுதி விட்டனர்.
செயற்பாடு கற்றல் அனுபவங்களின் ஊடாக பிரயோக ஆற்றல்மிக்க நற் பிரஜைகளை உருவாக்குதல்.
மாணவர்களிடையே தன்னம்பிக்கை சுய கற்றல் பிரயோக ஆற்றல் நற்பண்பு என்பவற்றினை விருத்தி செய்யும் வகையில் சிநேகபூர்வமான வழிகாட்டல்கள் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கற்றல் அனுபவங்கள் என்பவற்றை வழங்கல்.